search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "காந்தி சிலை"

    • எம்.எல்.ஏ. ராமச்சந்திரன் தலைமையில் காந்திய ஆதரவாளர்கள் சிலை முன்பு அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.
    • பொதுமக்கள் கம்பம் தெற்கு போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.

    கம்பம்:

    தேனி மாவட்டம் கம்பம்-குமுளி தேசிய நெடுஞ்சாலையில் தேரடி என்ற இடத்தில் தேசப்பிதா மகாத்மா காந்தியடிகளின் நின்ற நிலையில் உள்ள சிலை உள்ளது. இந்த சிலைக்கு காந்தி ஜெயந்தி, சுதந்திரதினம், குடியரசு தினம் உள்ளிட்ட நாட்களில் பல்வேறு அமைப்பினர் மாலை அணிவித்து மரியாதை செலுத்துவர். இந்த சிலையை சுற்றி தற்காலிக கம்பி வேலியும் அமைக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் நேற்று நள்ளிரவில் மர்ம நபர்கள் காந்தியின் சிலையை உடைத்து சேதப்படுத்தி சென்றுள்ளனர்.

    கைத்தடி ஊன்றியது போல இருந்த சிலையின் பாகம் உடைக்கப்பட்டு அகற்றப்பட்டு இருந்தது. இன்று அதிகாலை இதைப் பார்த்த அப்பகுதி பொதுமக்கள் கம்பம் தெற்கு போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.

    போலீசார் சம்பவ இடத்துக்கு வந்து விசாரணை மேற்கொண்டனர். மேலும் அப்பகுதியில் கண்காணிப்பு கேமராக்கள் ஏதேனும் பொருத்தப்பட்டுள்ளதா என்றும் அதில் சிலையை உடைத்த நபர்களின் உருவம் பதிவாகியுள்ளதா என்றும் சோதனை செய்து வருகின்றனர்.

    இதனிடையே காந்தி சிலை உடைக்கப்பட்ட சம்பவம் அறிந்ததும் த.மா.கா. முன்னாள் எம்.எல்.ஏ. ராமச்சந்திரன் தலைமையில் காந்திய ஆதரவாளர்கள் சிலை முன்பு அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.

    சிலையை சேதப்படுத்திய கும்பலை உடனடியாக கைது செய்யும் வரை போராட்டம் தொடரும் என்று அவர்கள் தெரிவித்ததால் கம்பத்தில் பரபரப்பான சூழல் நிலவியது.

    • நகராட்சி நிர்வாகம் நாளங்காடியை இடித்துவிட்டு புதிய கட்டிடம் கட்ட நிதி ஒதுக்கப்பட்டு பழைய கட்டிடங்கள் இடிக்கும் பணி தொடங்கப்பட்டு நடைபெற்று வருகிறது.
    • காந்தி சிலையை மர்ம நபர்கள் திருடி சென்ற சம்பவம் அரக்கோணத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

    அரக்கோணம்:

    அரக்கோணம் நகராட்சி நாளங்காடி கட்டிடம் கடந்த 1949-ம் ஆண்டு கட்டப்பட்டது. அப்போதே நாளங்காடியின் நுழைவுவாயிலின் மாடியில் மகாத்மா காந்தியின் மார்பளவு சிலை வைக்கப்பட்டது. அந்த நாளங்காடிக்கு காந்தி மார்க்கெட் என பெயரிடப்பட்டது.

    தொடர்ந்து 1984-ம் ஆண்டு நகராட்சி நிர்வாகம் சார்பில் நாளங்காடி கட்டிடத்தை இடித்து புதிய கட்டிடம் கட்டப்பட்டபோது இந்த நுழைவு வாயில் பகுதி மட்டும் இடிக்கப்படாமல் சீரமைக்கப்பட்டது. இதனால் அந்த காந்தி உருவச்சிலை அதே இடத்தில் இருந்தது.

    இந்த சிலைக்கு காங்கிரஸ் கட்சியினர் உள்ளிட்ட பல்வேறு அரசியல் அமைப்புகள் காந்தி பிறந்தநாள், நினைவுநாள், குடியரசு தினம், சுதந்திர தினம் ஆகிய நாட்களில் மாலை அணிவித்து மரியாதை செய்வதை வழக்கமாக கொண்டிருந்தனர்.

    தற்போது கட்டிடங்கள் கட்டி 39 ஆண்டுகள் ஆகியுள்ளதாலும், தற்போது பழுதாகி பயன்பாட்டிற்ககு உகந்த நிலை உள்ளது.

    இதனால் நகராட்சி நிர்வாகம் நாளங்காடியை இடித்துவிட்டு புதிய கட்டிடம் கட்ட நிதி ஒதுக்கப்பட்டு பழைய கட்டிடங்கள் இடிக்கும் பணி தொடங்கப்பட்டு நடைபெற்று வருகிறது.

    இதில் நாளங்காடியின் பின்பக்கம் இருந்த இறைச்சி விற்பனை பகுதி மட்டும் இடிக்கப்பட்ட நிலையில் மற்ற பகுதிகள் இடிக்கப்படவில்லை.

    இக்கட்டிடத்தில் வணிகம் செய்த வணிகர்கள் பலர் கடைகளை காலி செய்து தர தாமதம் செய்வதால் இடிக்கும் பணியில் தொய்வு ஏற்பட்டுள்ளது.

    இந்நிலையில் நேற்று பிற்பகல் நகராட்சி நாளங்காடியின் நுழைவுப்பகுதிக்கு ஆட்டோவில் வந்த சிலர் மகாத்மா காந்தியின் உருவச்சிலையை பெயர்த்து எடுத்துச் சென்றுவிட்டனர்.

    காந்தியின் சிலை அகற்றப்பட் டது குறித்து அரக்கோணம் நகராட்சி அலுவலகத்தில் விசாரித்தபோது தங்களுக்கு இது குறித்து தெரியாது எனவும், சிலையை அகற்ற யாரிடமும் கூறவில்லை எனவும் அவர்கள் தெரிவித்தனர்.

    இதையடுத்து மர்ம நபர்கள் சிலையை திருடி சென்றது தெரிய வந்துள்ளது. இதுகுறித்து நகராட்சி நிர்வாகம் விசாரணை நடத்தி வருகிறது. காந்தி சிலையை மர்ம நபர்கள் திருடி சென்ற சம்பவம் அரக்கோணத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. 

    • கனடாவில் இரண்டாவது முறையாக காந்தி சிலை சேதப்படுத்தப்பட்டது.
    • இச்சம்பவத்திற்கு கனடா தூதரை தொடர்பு கொண்டு இந்தியா கண்டனம் தெரிவித்துள்ளது.

    ஒட்டோவா:

    பஞ்சாப்பில் காலிஸ்தான் பிரிவினைவாத தலைவர் அம்ரித்பால் சிங்கை போலீசார் தேடி வருகிறார்கள். அவரது ஆதரவாளர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

    இதற்கு எதிர்ப்பு தெரிவித்து இங்கிலாந்து, அமெரிக்கா, கனடாவில் காலிஸ்தான் ஆதரவாளர்கள் போராட்டங்கள் நடத்தி வருகிறார்கள். இந்திய தூதரகங்கள் முன்பு போராட்டம் நடந்தது.

    கனடாவின் பிரிட்டிஷ் கொலம்பியா மாகாணத்தில் சைமன் பிரேசர் பல்கலைக்கழக வளாகத்தில் மகாத்மா காந்தி சிலை உள்ளது.

    இந்நிலையில், மகாத்மா காந்தி சிலையை காலிஸ்தான் ஆதரவாளர்கள் நேற்று சேதப்படுத்தினர். இந்தச் சம்பவத்திற்கு கனடா நாட்டுத் தூதரை தொடர்பு கொண்டு இந்திய வெளியுறவுத் துறை கண்டனம் தெரிவித்துள்ளது.

    ஏற்கனவே, கடந்த வாரம் கனடாவின் ஒன்டாரியோ மாகாணத்தில் உள்ள ஹாமில்டன் நகரில் 6 அடி உயர மகாத்மா காந்தி சிலையை, காலிஸ்தான் ஆதரவாளர்கள் சிலர் சேதப்படுத்தியனர். அதன் கீழே நம் நாட்டுக்கு எதிராகவும், பிரதமர் மோடிக்கு எதிராகவும் வாசகங்கள் எழுதி அட்டூழியம் செய்தனர்.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • மெட்ரோ ரெயில் பணிகளுக்கு இடையூறாக இருப்பதால் காந்தி சிலையை தற்காலிகமாக அகற்றி வேறு இடத்தில் அமைக்க முடிவு செய்யப்பட்டது.
    • முதலில் ரிப்பன் மாளிகை வளாகத்தில் கொண்டு வைக்க திட்டமிட்டார்கள்.

    சென்னை:

    சென்னை மெரினா கடற்கரை கலங்கரை விளக்கத்தில் இருந்து பூந்தமல்லி வரை 26.1 கிலோ மீட்டர் தூரத்துக்கு மெட்ரோ ரெயில் பாதை அமைக்கப்படுகிறது.

    இதற்காக காமராஜர் சாலையில் சுரங்கம் தோண்டும் பணிகள் நடந்து வருகிறது. சுரங்கத்துக்குள் இரட்டை வழித்தடங்கள் அமைக்கப்படுகிறது. இந்த பணிகள் நடைபெறும் இடத்தில்தான் சென்னையின் அடையாளங்களில் ஒன்றான காந்தி சிலை அமைந்துள்ளது.

    12 அடி உயரம் கொண்ட இந்த சிலை 1959-ம் ஆண்டு அப்போதைய பிரதமர் நேருவால் திறந்து வைக்கப்பட்டது.

    மெட்ரோ ரெயில் பணிகளுக்கு இடையூறாக இருப்பதால் இந்த சிலையை தற்காலிகமாக அகற்றி வேறு இடத்தில் அமைக்க முடிவு செய்யப்பட்டது.

    முதலில் ரிப்பன் மாளிகை வளாகத்தில் கொண்டு வைக்க திட்டமிட்டார்கள். ஆனால் பழமையான இந்த சிலையை வெகு தூரம் எடுத்து செல்வதன் மூலம் சிலை சேதமடையலாம் என்பதால் கொஞ்சம் தள்ளி வைப்பது பற்றி பரிசீலித்தனர். அதன்படி தற்போது சிலை இருக்கும் இடத்தில் இருந்து 20 மீட்டர் தொலைவுக்கு உள்ளேயே வைக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.

    இதையடுத்து சிலை மூடப்பட்டது. இன்னும் சில தினங்களில் ராட்சத கிரேன் மூலம் காந்தி சிலை அகற்றப்பட்டு தள்ளி வைக்கப்படுகிறது.

    மெட்ரோ ரெயில் பணிகள் நிறைவடைந்த பிறகு மீண்டும் காந்தி சிலை அதன் இடத்தில் வைக்கப்படும் என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.

    • மெட்ரோ ரெயில் திட்டத்தின் 2ஆம் கட்ட பணிகளுக்காக காந்தி சிலையை இடமாற்றம் செய்ய வேண்டிய நிர்பந்தம் ஏற்பட்டது.
    • பணிகள் நிறைவடைந்ததும் காந்தி சிலை மீண்டும் பழைய இடத்தில் வைக்கப்படும்.

    சென்னை:

    சென்னை மெட்ரோ ரெயில் திட்டத்தின் 2ஆம் கட்ட பணிகளுக்காக காந்தி சிலையை இடமாற்றம் செய்ய வேண்டிய நிர்பந்தம் ஏற்பட்டது. இதையடுத்து, தமிழக அரசிடம் மெட்ரோ ரெயில் நிர்வாகம் அனுமதி கோரியிருந்தது.

    தமிழக அரசு இன்று ஒப்புதல் அளித்திருப்பதை அடுத்து, இந்த மாத இறுதிக்குள் காந்தி சிலையை இடமாற்றம் செய்ய மெட்ரோ நிர்வாகம் முடிவு செய்துள்ளது. தற்போது காந்தி சிலை அமைந்திருக்கும் பகுதியில் தான், இரண்டாம் கட்ட மெட்ரோ ரெயில் திட்டத்தின் 90 சதவீத பணிகள் நடைபெறவிருக்கிறது.

    இந்தப் பணிகள் நிறைவடைந்ததும் காந்தி சிலை மீண்டும் பழைய இடத்தில் வைக்கப்படும். சிலை மீண்டும் பழைய இடத்துக்கு மாற்றப்படும் வரை காந்தி சிலையை மக்கள் பார்வையிடவோ, மாலை அணிவித்து மரியாதை செலுத்துவதோ இயலாது என்றும் தகவல்கள் தெரிவிக்கின்றன. மெட்ரோ ரெயில் திட்டப் பணிகளுக்காக ராட்சத இயந்திரங்களை பயன்படுத்தும் போது சிலைக்கு ஏதேனும் சேதாரம் ஆகக் கூடாது என்பதற்காகவே காந்தி சிலை 15 மீட்டர் தொலைவுக்கு இடமாற்றம் செய்யப்படுவதாகவும் விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது.

    • ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலின் தலைவர் பொறுப்பை இந்தியா அடுத்த மாதம் ஏற்க உள்ளது.
    • இதையடுத்து, ஐ.நா. தலைமையகத்தில் மகாத்மா காந்தியின் சிலை திறக்கப்படுகிறது.

    நியூயார்க்:

    ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலின் தலைவர் பொறுப்பை இந்தியா டிசம்பர் மாதம் ஏற்கிறது. இதையொட்டி மகாத்மா காந்தியின் மார்பளவு சிலை ஒன்றை ஐ.நா.வுக்கு இந்தியா பரிசளித்துள்ளது.

    இந்த சிலை ஐ.நா. தலைமையகத்தின் வடபகுதியில் உள்ள புல்வெளியில் நிறுவப்படுகிறது. அடுத்த மாதம் 14-ம் தேதி மத்திய வெளியுறவு மந்திரி ஐ.நா. செல்கிறார். அப்போது இந்த சிலை திறக்கப்படுகிறது. இந்த சிலை திறப்பு விழாவில் ஐ.நா. பொதுச் செயலாளர் அன்டோனியோ குட்டரெஸ் மற்றும் பாதுகாப்பு கவுன்சிலின் 15 உறுப்பு நாடுகளின் பிரதிநிதிகள் பங்கேற்பார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

    இந்த மகாத்மா காந்தி சிலையை புகழ்பெற்ற சிற்பியும், பத்மஸ்ரீ விருது பெற்றவருமான ராம் சுதர் வடிவமைத்துள்ளார். இதன்மூலம் ஐ.நா. தலைமையகத்தில் முதல் முறையாக மகாத்மா காந்தி சிலை இடம்பெறுகிறது.

    முன்னதாக, கடந்த 1982-ம் ஆண்டு சூரிய கடவுளின் சிலை ஒன்றை இந்தியா ஐ.நா.வுக்கு பரிசளித்து இருந்தது. இந்த தகவல்களை ஐ.நா.வுக்கான இந்தியாவின் பிரதிநிதி ருச்சிரா கம்போஜ் தனியார் செய்தி நிறுவனத்துக்கு அளித்த பேட்டியில் தெரிவித்துள்ளார்.

    • கலங்கரை விளக்கத்தில் இருந்து பூந்தமல்லி வரை மெட்ரோ ரெயில் பாதை அமைக்கப்படுகிறது.
    • கடற்கரையில் உள்ள காந்தி சிலை 60 ஆண்டுகள் பழமை வாய்ந்தது.

    சென்னை :

    சென்னை மெரினா கடற்கரையின்முக்கிய அடையாளமாக திகழும் காந்தி சிலை கடந்த 1959-ம் ஆண்டு தேபி பிரசாத் ராய் சவுத்ரி என்பவரால் செதுக்கப்பட்டு, அப்போதைய பிரதமர் ஜவஹர்லால் நேரு, முதல்-அமைச்சர் காமராஜ் முன்னிலையில் 12 அடி வெண்கல காந்தி சிலை திறந்து வைக்கப்பட்டது.

    ஒவ்வொரு ஆண்டும் காந்தி நினைவு தினம் அன்று கவர்னர், முதல்-அமைச்சர் உள்ளிட்ட முக்கிய பிரமுகர்கள் காந்தி சிலைக்கு அருகில் அலங்கரித்து வைக்கப்பட்டுள்ள காந்தியின் உருவப்படத்திற்கு மலர் தூவி மரியாதை செதுத்துவார்கள். அத்துடன் தேசபக்தி பாடல் பாடுவது, ராட்டையில் நூல் நூற்பது உள்ளிட்ட நிகழ்ச்சிகளும் நடத்தப்பட்டு வருகிறது.

    இந்த நிலையில் கலங்கரை விளக்கத்தில் இருந்து பூந்தமல்லி வரை 26.1 கி.மீ. தூரத்திற்கு மெட்ரோ ரெயில் பாதை மற்றும் ரெயில் நிலையங்கள் அமைக்கப்படுகிறது. இதற்காக சென்னை மெரினா கடற்கரையில் காமராஜர் சாலையில் உள்ள காந்தி சிலை அருகில் கடற்கரை மெட்ரோ ரெயில் நிலையம் சுரங்கத்தில் அமைக்கப்பட உள்ளது.

    இதற்காக தற்போது காந்தி சிலை அருகில் உள்ள இடங்கள் இரும்பு வேலி போடப்பட்டு ஆரம்ப கட்டப்பணிகள் நடந்து வருகிறது. இந்த பணியின்போது காந்தி சிலைக்கு சேதம் ஏற்படாமல் இருக்க தற்காலிகமாக காந்தி சிலையை பணி முடியும் வரை வேறு இடத்தில் வைக்க முடிவு செய்யப்பட்டு உள்ளது.

    இதுகுறித்து சென்னை மெட்ரோ ரெயில் நிறுவன அதிகாரிகள் கூறியதாவது:-

    கடற்கரையில் உள்ள காந்தி சிலை 60 ஆண்டுகள் பழமை வாய்ந்தது. சுரங்கம் தோண்டும் பணியின்போது சேதம் அடையாமல் இருப்பதற்காக பணி முடியும் வரை தற்காலிகமாக மாற்று இடத்தில் கொண்டு போய் பாதுகாப்பாக வைக்க முடிவு செய்யப்பட்டு உள்ளது. இதற்காக முறையாக மாநகராட்சியிடம் அனுமதி கோரப்பட்டு உள்ளது.

    இதனைத்தொடர்ந்து இந்த சிலையை பொதுப்பணித்துறையினர் அப்புறப்படுத்த உள்ளனர். இதற்கு முன்பாக முறையாக ஆய்வு செய்யப்பட்டு, மெரினா கடற்கரை பகுதியிலேயே பாதுகாப்பான இடத்தை பொதுப்பணித்துறையினர் தேடி வருகின்றனர். இடம் தேர்வு செய்யப்பட்டு இறுதி செய்யப்பட்டவுடன் சிலை இரவில் பாதுகாப்பாக மாற்ற முடிவு செய்யப்பட்டு உள்ளது. பணிகள் நிறைவடைந்தவுடன் மீண்டும் அதே இடத்தில் காந்தி சிலை நிறுவப்படும்

    இவ்வாறு அதிகாரிகள் கூறினர்.

    • நியூயார்க்கில் மகாத்மா காந்தி சிலை சேதப்படுத்தப்பட்டது.
    • இதற்கு இந்திய தூதரகம் கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.

    நியூயார்க்:

    அமெரிக்காவின் நியூயார்க் நகரில் இந்து கோயில் முன்பு இருந்த மகாத்மா காந்தி சிலையை மர்ம நபர்கள் சேதப்படுத்தினர். இது குறித்த காட்சிகள் அப்பகுதியில் இருந்த சிசிடிவி கேமராவில் பதிவானது. இதனை வெறுப்பை ஏற்படுத்தும் குற்றமாக கருதி நியூயார்க் நகர போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    இந்நிலையில், காந்தி சிலை சேதப்படுத்தப்பட்டதற்கு இந்தியா கண்டனம் தெரிவித்துள்ளது.

    இதுதொடர்பாக, இந்திய தூதரக அதிகாரிகள் கூறுகையில், சம்பந்தப்பட்டவர்கள் தண்டிக்கப்பட வேண்டும். இது குறித்து விசாரணை நடத்தப்பட வேண்டும் என்பதால் அமெரிக்க அதிகாரிகளின் கவனத்திற்கு கொண்டு சென்றுள்ளோம் என தெரிவித்தனர்.

    • ரூ .3 ஆயிரம் வழங்குவதற்கு நாடாளுமன்ற குழு பரிந்துரை செய்துள்ளது.
    • ஓய்வூதிய தொகை வழங்கக்கோரி போராட்டம்

    உடுமலை :

    ஓய்வூதியம் பெறுகிறவர்களுக்கு ஓய்வூதிய தொகையாக மாதம் ரூ .3 ஆயிரம் வழங்குவதற்கு நாடாளுமன்ற குழு பரிந்துரை செய்துள்ளது.

    அதன்படி ஓய்வூதிய தொகை வழங்கக்கோரி மத்திய அரசின் கவனத்தை ஈர்க்கும் வகையில் உடுமலையில் மகாத்மா காந்தி சிலையிடம் கோரிக்கை மனு கொடுக்கும் போராட்டம் ஓய்வூதிய நல சங்கத்தின் சார்பில் உடுமலை குட்டை திடலில் நடந்தது. சங்கத் தலைவர் எல்ஐசி. வேலாயுதம் தலைமை வகித்தார் .செயலாளர் ஆறுமுகம் முன்னிலை வகித்தார். நகராட்சி துணைத்தலைவரான கலைராஜன் உட்பட செயற்குழு உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.

    • எழும்பூர் ரெயில் நிலைய வளாகத்தில் நிறுவப்பட்டுள்ள காந்தி சிலை பராமரிப்பின்றி பரிதாபமாக காட்சி அளித்துக் கொண்டிருக்கிறது.
    • சுற்றிலும் சாக்கடை நீர் சூழ்ந்துள்ள நிலையில் துர்நாற்றத்தின் பிடியில் காந்தி சிலை காட்சி அளித்துக் கொண்டிருக்கிறது.

    தேசப்பிதா என்று அழைக்கப்படும் மகாத்மா காந்திக்கு நாடு முழுவதும் பல இடங்களில் சிலை அமைக்கப்பட்டு பராமரிக்கப்பட்டு வருகிறது.

    அந்த வகையில் எழும்பூர் ரெயில் நிலைய வளாகத்தில் நிறுவப்பட்டுள்ள காந்தி சிலை பராமரிப்பின்றி பரிதாபமாக காட்சி அளித்துக் கொண்டிருக்கிறது.

    எழும்பூர் ரெயில் நிலையத்தின் பிரதான நுழைவுவாயிலில் பார்சல் பிரிவு வளாகத்தில் அமைக்கப்பட்டுள்ள காந்தி சிலை கவனிப்பாரின்றி உள்ளது. சுற்றிலும் சாக்கடை நீர் சூழ்ந்துள்ள நிலையில் துர்நாற்றத்தின் பிடியில் காந்தி சிலை காட்சி அளித்துக் கொண்டிருக்கிறது.

    இந்த சிலையின் வரலாறு கல்வெட்டாக பொறிக்கப்பட்டுள்ளது. ஆனால் கல்வெட்டில் உள்ள எழுத்துகள் எல்லாம் அழிந்து அவை வெறும் காட்சி பொருளாகவே உள்ளது.

    ரெயிலில் வரும் பார்சல்கள் குறிப்பாக இரு சக்கர வாகனங்களை இறக்கி நிறுத்தி வைத்துள்ள பகுதியில்தான் இந்த காந்தி சிலை அமைக்கப்பட்டு உள்ளது. பார்சல்களை எடுக்கச் செல்லும் பொது மக்கள் காந்தி சிலையை பார்த்து கண்ணீர் வடிக்கின்றனர்.

    நாட்டுக்கு சுதந்திரம் வாங்கி தந்த மகாத்மா காந்திக்கு நேர்ந்த சத்திய சோதனையா இது? என்று மக்கள் கேள்வி எழும்புகிறார்கள்.

    ரெயில்வே வளாகத்தில் உள்ள இந்த சிலையை அதிகாரிகள் சுத்தம் செய்து அதனை முறையாக பராமரிக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். எனவே இனியாவது சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உடனடியாக காந்தி சிலை இருக்கும் பகுதியை சுத்தம் செய்து அந்த பகுதியை சுகாதாரமான முறையில் பராமரிக்க வேண்டும் என்பதே தேசபக்தர்களின் வேண்டுகோளாக உள்ளது.

    காந்தி சிலைக்கு அதிகாரிகள் உரிய மரியாதையை அளிப்பார்களா? பொறுத்திருந்து பார்ப்போம்.

    • காந்தி சிலை சேதப்படுத்தப்பட்டதற்கு இந்தியா கடும் கண்டனம் தெரிவித்து உள்ளது.
    • ரிக்மண்ட் ஹில் விஷ்ணு கோவிலில் உள்ள மகாத்மா காந்தி சிலை சேதப்படுத்தப்பட்டதை அறிந்து நாங்கள் அதிர்ச்சியும், வேதனையும் அடைந்தோம்.

    ஒட்டாவா:

    கனடா ஆண்டோரியோவில் ரிச்மண்ட் ஹில் யாங்கே தெருவில் பிரசித்தி பெற்ற விஷ்ணு கோவில் உள்ளது. இங்குள்ள வளாகத்தில் மகாத்மா காந்தி சிலை அமைந்துள்ளது.

    நேற்று இரவு இந்த காந்தி சிலையை யாரோ சேதப்படுத்தினர். மேலும் கரி பூசி அவமதிப்பும் செய்தனர். இந்த செயலில் ஈடுபட்டது யார் என்று தெரியவில்லை. இந்த சம்பவம் குறித்து கனடா போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    காந்தி சிலை சேதப்படுத்தப்பட்டதற்கு இந்தியா கடும் கண்டனம் தெரிவித்து உள்ளது. இது தொடர்பாக கனடாவில் உள்ள இந்திய துணைத்தூ தரகம் வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில் கூறி இருப்பதாவது:-

    ரிக்மண்ட் ஹில் விஷ்ணு கோவிலில் உள்ள மகாத்மா காந்தி சிலை சேதப்படுத்தப்பட்டதை அறிந்து நாங்கள் அதிர்ச்சியும், வேதனையும் அடைந்தோம். இது வெறுக்கத்கக்க, காழ்ப்புணர்ச்சி ஆகும். சம்பந்தப்பட்டவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்குமாறு கனடா போலீசாருக்கு தெரிவித்து உள்ளோம்.

    இவ்வாறு அதில் குறிப்பிடப்பட்டு உள்ளது.

    கலாச்சார நினைவுச்சின்னங்கள் மீதான தாக்குதல்களை பொறுத்துக்கொள்ள முடியாது என்று ஆஸ்திரேலிய பிரதமர் ஸ்காட் மாரிசன் கண்டனம் தெரிவித்துள்ளார்.
    மெல்போர்ன்:

    ஆஸ்திரேலியாவின் மெல்போர்ன் புறநகர்ப்பகுதியான ரோவில்லே பகுதியில் ஆஸ்திரேலிய-இந்திய சமூக மையம் உள்ளது. இங்கு மகாத்மா காந்தி முழு உருவ வெண்கலச் சிலை திறக்கப்பட்டது. இந்தியாவின் 75வது சுதந்திர தின கொண்டாட்டத்தின் ஒரு பகுதியாக, இந்திய அரசு பரிசாக கொடுத்த அந்த சிலையை, கடந்த வெள்ளிக்கிழமையன்று ஆஸ்திரேலிய பிரதமர் ஸ்காட் மாரிசன் திறந்து வைத்தார். இந்நிகழ்ச்சியில் இந்திய தூதர் ராஜ்குமார் மற்றும் ஆஸ்திரேலிய அதிகாரிகள் பங்கேற்றனர்.

    ஆனால், திறக்கப்பட்ட சில மணி நேரங்களில் காந்தி சிலையை மர்ம நபர்கள் உடைத்து சேதப்படுத்தினர். இதனால் அப்பகுதியில் திடீர் பரபரப்பு ஏற்பட்டது. போலீசார் வழக்குப்பதிவு செய்து குற்றவாளிகளை தேடி வருகின்றனர். சிலையை அவமதித்து சேதப்படுத்தியவர்கள் பற்றி தெரிந்தால் தகவல்  கொடுக்கலாம் என போலீசார் கேட்டுக்கொண்டுள்ளனர்.

    காந்தி சிலை அவமதிக்கப்பட்டதற்கு ஆஸ்திரேலிய பிரதமர் ஸ்காட் மாரிசன் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். இந்த அளவுக்கு காந்தியை அவமரியாதை செய்வதை பார்ப்பது வெட்கக்கேடானது மற்றும் மிகவும் அதிர்ச்சி அளிக்கிறது என அவர் கூறி உள்ளார்.

    கலாச்சார நினைவுச்சின்னங்கள் மீதான தாக்குதல்களை பொறுத்துக்கொள்ள முடியாது என்றும், ஆஸ்திரேலிய இந்திய சமூகத்திற்கு மிகுந்த அவமரியாதை செய்தவர்கள் வெட்கப்பட வேண்டும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

    ×